இந்தியா

ராஜஸ்தான்: பெண்களுக்கு இலவச பேருந்துப் பயண அறிவிப்பு

DIN

ராஜஸ்தானில் வருகிற மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அரசுப் பேருந்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மற்றும் விரைவு உள்பட அனைத்து  அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தன்று சுமார் 8.50 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7.50 கோடி நிதிச்சுமை ஏற்படும் என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

சாதாரண  அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை 30 சதவிகிதத்திலிருந்து, 50 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்திற்கும் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT