முகப்பு
இந்தியா

பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டது எப்படி?

கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கிடைத்த பணம் வீட்டின் ஒரு அறை முழுக்க கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 மார்ச், 2023 at 5:59 PM
பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் சோதனை: கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம்
பகிர்:


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கிடைத்த பணம் வீட்டின் ஒரு அறை முழுக்க கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ மதல் விருப்பாக்சப்பாவின் மகன் பிரசாந்த். இவரது வீட்டில் வியாழக்கிழமை லோகாயுக்தா அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் சோதனை நடந்த வீட்டில் இருந்தவர்களைக் காட்டிலும், வீட்டிக் கிடைத்த கட்டுக்கட்டான பணத்தைப் பார்த்து அதிகாரிகள்தான் அதிகம் அதிர்ச்சியடைந்தார்கள்.

தோண்டத் தோண்டப் பணம் என்பது போல, எங்கு தொட்டாலும் பணக்கட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றை ஒரே இடத்தில் கட்டுக்கட்டாக அடுக்கி அனைத்தையும் இரவு பகல் பாராமல் எண்ணிப் பார்த்ததில் வெறும் 6 கோடி பணம் என்பது தெரிய வந்தள்ளது.

கிரெசன்ட் சாலையில் உள்ள மதல் விருப்பாக்ஷப்பாவின் அலுவலகத்தில், அவரது மகன் மூலம் லஞ்சம் வாங்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, வியாழக்கிழமை மாலை, பாஜக எம்எல்ஏவின் அலுவலகம் சென்ற காவல்துறையினர், மறைந்திருந்து அங்கு நடப்பதை பார்த்தனர். அப்போது, தந்தைக்கு தர வேண்டிய ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்தை மகன் பிரசாந்த் வாங்கியதை காவல்துறையினர் பார்த்து கையும் களவுமாகக் கைது செய்தனர்.

இதையடுத்தே, பிரசாந்த் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.6 கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.