இந்தியா

பிரிந்து 75 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சீக்கிய சகோதரர்களின் குடும்பம்

ENS


லாகூர்: 1947ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 75 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துளள்து.

பாகிஸ்தானின் கர்தார்பூர் வளாகததில் குருதேவ் சிங் மற்றும் தயா சிங் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

இருவரும் 75 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டனர். பின்னர்  அது ஆனந்தமாக மாறி, ஒருவர் மீது ஒருவர் பூக்களை தூவி, பாடல்களைப் பாடி கொண்டாட்டக் களமாக ஆனது.

இருவரும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். இவர்களது தந்தை இறந்துவிட்டதால், தந்தையின் நண்பர் கரீம் பாக்சாவின் கவனிப்பில் இருந்தனர். பிரிவினையின்போது கரீம் மூத்த மகன் குருதேவுடன் பாகிஸ்தான் சென்றுவிட, மற்றொரு உறவினருடன் தயா சிங் தங்கிவிட்டார். பாகிஸ்தான் சென்ற கரீம் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார். குருதேவ் சிங் பெயர் குலாம் முகமது என்று மாற்றப்பட்டுள்ளது.

குருதேவ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, குருதேவின் மகன் முகமது ஷரிஃப், இந்திய அரசுக்கு, தனது தந்தை ஒரு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில் தனது சகோதரர் தயா சிங் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு, சமூக ஊடகங்களின் வாயிலாக தயா சிங் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து அவர்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, இருவரது குடும்பத்தினரும் கர்தார்புர் வளாகத்தில் சந்தித்து தங்களது ரத்த உறவை உறுதி செய்து கொண்டனர். இதையெல்லாம் பார்க்க தனது தந்தை குருதேவ் இல்லையே என்று மனம் வருந்தினார் முகமது ஷரிஃப்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

SCROLL FOR NEXT