முகப்பு
இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் கிரிக்கெட்! ராணுவ வீரர்கள் உற்சாகம்!!

ஜம்மு-காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடி உற்சாகமடைந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:


ஜம்மு-காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடி உற்சாகமடைந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக கல்வான் நதி பாய்கிறது. ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. 

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பொழுதுபோக்காக பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் கல்வான் பள்ளத்தாக்கில் திடல் சரிசெய்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிடப்பட்டு வருகிறது.

மேலும், பங்காங் ஏரி அருகே குதிரையில் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். இதோடு மட்டுமல்லாமல் லடாக்கில் ராணுவ வீரர்களுக்கிடையே பனிச்சறுக்கு ஹாக்கி போட்டியும் நடத்தப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →