முகப்பு
இந்தியா

ஐஃபோன் 15 ப்ரோ மாடலில் 2 வால்யூம் பட்டன்கள் இருக்காது

தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐஃபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் இரண்டு வால்யூம் பட்டன்கள் இடம்பெற்றிருக்காது.

Updated On : 4 மார்ச், 2023 at 5:43 PM
ஐஃபோன் 15 ப்ரோ மாடலில் 2 வால்யூம் பட்டன்கள் இருக்காது
பகிர்:


சான் பிரான்சிஸ்கோ: தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐஃபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் இரண்டு வால்யூம் பட்டன்கள் இடம்பெற்றிருக்காது.

வரவிருக்கும் ஸ்மார்ட்ஃபோனின் வரைபடத்தின் மாடல்  கசிந்திருக்கிறது. அதில், இரண்டு வால்யூம் பட்டன்களுக்கு மாறாக, ஒரே நீண்ட வால்யூம் பட்டம் இடம்பெற்றிருக்கும் என்று ஆப்பிள்இன்சைடர் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் 15 ப்ரோ மாடல், நீர் மற்றும் மாசுகளால் அதிகம் பாதிக்கப்படாத வகையில் சிறிய துளைகளைக் குறைவாகக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐஃபோன் 15 ப்ரோ மற்றும் ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் வகை ஸ்மார்ட்ஃபோன்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது வளைந்த டைட்டானியம் பக்கங்களுடன் யுஎஸ்பி-சி வகை சார்ஜ் போர்ட் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.