இந்தியா

இடையூறுகளைத் தாண்டி நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றம் பல சவாலன தருணங்களை சந்தித்துள்ளதாகவும், அதனை உரிய முறையில் கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்.

DIN

உச்சநீதிமன்றம் பல சவாலன தருணங்களை சந்தித்துள்ளதாகவும், அதனை உரிய முறையில் கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார்.


சிறப்பான ஜனநாயகம் அமைய சுதந்திரமான நீதித் துறை என்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். ’சுதந்திரமான நீதித் துறை: சிறப்பான ஜனநாயகத்தின் தேவை’ என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்தக் கருத்தரங்கில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியதாவது: உச்சநீதிமன்றம் இன்று பல்வேறு விதமான சவால்களை சந்திக்கிறது. இந்த சவால்களை சமாளிக்க சுதந்திரமான மற்றும் வலிமையான நீதித்துறை என்பது அவசியம். நாம் அனைத்து விதமான அழுத்தங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த விதமான இடையூறு ஏற்பட்டாலும் அதனையும் திறம்பட எதிர்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நிர்வாகிகளின் குறுக்கீடுகள் ஏற்படும். ஆனால், அவற்றையெல்லாம் திறம்பட கையாண்டு நீதித்துறையின் சுதந்திரத்தன்மை காக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தன்மை என்பது நீதிமன்ற செயல்பாடுகளில் நேர்மையை உறுதிப்படுத்துவது, பாரபட்சமின்மை, வழக்குகளை சுதந்திரமாக விசாரிப்பது ஆகியனவாகும். மாவட்ட நீதித் துறை யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் இல்லை. அவர்களது பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் போன்றன உயர்நீதிமன்றங்களின் பரிந்துரையின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

நீதித்துறையின் செயல்பாடுகளில் எந்த ஒரு புறக்காரணிகளின் குறுக்கீடும் இருக்கக் கூடாது. அதனை, அரசியலைமைப்பு சட்டவிதிகள் உறுதிப்படுத்துகின்றன. நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை உறுதிப்படுத்த நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவதில் முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டும். எந்த ஒரு அமைப்பும் நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்தக்  கூடாது. நீதித்துறையின் தோள்கள் புறக்காரணிகளால் எந்த மாதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் அதனைத் தாங்கும் வலிமை படைத்தாக இருக்க வேண்டும் என்றார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT