இந்தியா

வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் வெற்றி கிடைத்தது: அசாம் முதல்வர்

வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் வெற்றி கிடைத்தது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

DIN

வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் வெற்றி கிடைத்தது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி மீது வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். மேகாலயாவைத் தவிர, இரண்டு மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். இது மக்களவைத் தேர்தலிலும் குறைந்தபட்சம் 25-26 இடங்களையாவது வெல்வோம் என்பதை தெளிவாக உறுதி செய்கிறது. வடகிழக்கில் பிரதமர் மோடியின் முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது.

திரிபுராவில் பதவியேற்பு விழா மார்ச் 8 ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் மார்ச் 7 ஆம் தேதியும் நடைபெறலாம். 

திரிபுராவில் உள்ள பாஜக தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை அழைத்துள்ளனர். பிரதமர் வடகிழக்கு மற்றும் இங்குள்ள மக்களை நேசிக்கிறார். பிரதமர் மோடி வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திரிபுராவில் பாஜக - திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இங்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதேபோல், நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பேரவை உருவாகியுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT