முகப்பு
இந்தியா

அசாம் மாநிலம் நகோனில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது

அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

Updated On : 6 மார்ச், 2023 at 9:56 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:10 PM

குவஹாட்டி: அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

ரகசிய தகவலின் அடிப்படையில் ஜகலபந்தா அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது அதன் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.270 கிலோ மார்பின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.