இந்தியா

மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல்!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் மார்ச் 20 வரை தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN


தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் மார்ச் 20 வரை தில்லி நீதிமன்றத்தில் நீட்டித்துள்ளது. 

முன்னதாக நீதிமன்றம் அனுமதித்த 9 நாள் நீதிமன்ற காவல் விசாரணை நிறைவடைந்த நிலையில் சிசோடியா இன்று சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சிசோடியாவின் காவல் மேலும் 14 நாள்கள் நீடித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, கடந்த 27-ம் தேதி தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 9 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

தற்போது சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்படடார். இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் காவல் மேலும் மார்ச் 20 வரை நீடித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

மருத்துவமனையிலிருந்து ஷூப்மன் கில் டிஸ்சார்ஜ்!

பள்ளிக் குழந்தைகளை மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

சிலியில் அதிபர் தேர்தல்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT