நிக்கோபார் தீவுகளில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக அதிகாலை 05:07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.