கோப்புப் படம் 
இந்தியா

மனைவியைத் தீ வைத்து எரித்த கணவர் கைது!

குடிபோதையில் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் மனைவியை தீ வைத்து எரித்த 33 வயது கணவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

DIN

நொய்டா: குடிபோதையில் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் மனைவியை தீ வைத்து எரித்த 33 வயது கணவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

வாஜிப்பூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தோட்டக்காரராக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட யத்வேந்திர யாதவ், மார்ச் 2ஆம் தேதி எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 135ல் உள்ள தனது வீட்டில் தனது மனைவி வினிதாவை  தீ வைத்து எரித்துள்ளார்.

இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான யாதவ், அடிக்கடி மது அருந்துவதை எதிர்த்த தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடந்த 2ஆம் தேதி இரவு இருவருக்கும் இதே பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வினிதா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதாகவும், யாதவ் தீ வைத்ததாகவும் காவலர் ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்த சிலர் வினிதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  தற்போது பலத்த தீ காயங்களுடன் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெண்ணின் சகோதரர், தனது புகாரில், யாதவின் குடிப்பழக்கம் காரணமாக தம்பதியினருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 504 (அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT