பாராகிளைடிங் விபத்து! கம்பத்தில் சிக்கிய ஆண்-பெண்!
கேரளத்தில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நேரிட்ட விபத்தில் ஆணும் - பெண்ணும் மின்கம்பத்தில் சிக்கித்தவித்த விடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கேரளத்தில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நேரிட்ட விபத்தில் ஆணும் - பெண்ணும் மின்கம்பத்தில் சிக்கித்தவித்த விடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பாராகிளைடிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த ஆண் - பெண் இருவர் பறக்கும்போது நிலைதடுமாறியுள்ளனர்.
அப்போது நிலைதடுமாறியதால், வர்கலா பகுதியின் சாலை சந்திப்பில் அமைந்துள்ள உயர்ந்த மின்கம்பத்தில் மோதினர். இதில் பாராகிளைடருடன் கம்பத்தில் ஆணும் பெண்ணும் தொங்கியபடி இருந்ததை அப்பகுதியிலுள்ளவர்கள் விடியோ எடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இவர்கள் இருவரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், பாராகிளைடிங் செய்யும்போது விபத்து நேரிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.