இந்தியா

பள்ளி உணவில் குறைபாடு? 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

DIN

மும்பை: உணவு விஷம் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைத் தொடர்ந்து தெற்கு மும்பையைச் சேர்ந்த பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியின் ஏழு குழந்தைகள் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள், மதியம் 12.45 மணியளவில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்று வலி குறித்து புகார் அளித்ததையடுத்து மும்பை மத்திய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் டார்டியோ பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா மெமோரியல் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏழு குழந்தைகளில் ஐந்து பேர் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் மற்ற இருவர் இளையவர்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

ஐந்து குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் மேலும் இரண்டு குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் ஏழு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் சாப்பிட்ட உணவு காரணமா என்பது குறித்து இன்னும் உறூதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

SCROLL FOR NEXT