இந்தியா

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர். பாலு சந்திப்பு!

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர், பாலு, பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

DIN

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர், பாலு, பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு போதிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி. டி.ஆர், பாலு, பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிதீஷ் குமாரிடம் விளக்கியதாகத் தெரிகிறது. 

முன்னதாக, பிகார் அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தியது. தொடர்ந்து பிகார் மாநில அதிகாரிகள் குழுவினர் இன்று தலைமைச் செயலாளரை சந்தித்துப் பேசி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT