திரிபுராவின் புதிய அமைச்சரவையுடன் பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

திரிபுரா முதல்வராக மீண்டும் பதவியேற்றார் மாணிக் சாஹா!

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

DIN

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வென்றன.

தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

இந்நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வராக மாணிக் சாஹாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகரில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

பைக்கில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: 4 போ் கைது

விடுதலைத் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

மணல் லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT