இந்தியா

பெண்கள் மேம்பாட்டிற்காக அரசு தொடர்ந்து பாடுபடும்: பிரதமர் மகளிர் நாள வாழ்த்து

DIN


புதுதில்லி: சர்வதேச மகளிர் நாளில் நாரி சக்தியின் சாதனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவிட்டிருப்பதாவது: 

“சர்வதேச மகளிர் நாளில், நமது நாரி சக்தியின் சாதனைகளுக்கு அஞ்சலி. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் மேம்பாடு, அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்துள்ளார். 

ஹோலி வாழ்த்து: 
வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி. இந்த பன்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் அனைவரது வாழ்க்கையில் பொழியட்டும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT