முகப்பு
இந்தியா

அசாமில் மாட்டுத் தலைகளைக் கடத்திய 2 பேர் கைது!

அசாமின் நாகோன் மாவட்டத்தில் லாரி ஒன்றிலிருந்து 24 மாடுகளின் தலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

அசாமின் நாகோன் மாவட்டத்தில் லாரி ஒன்றிலிருந்து 24 மாடுகளின் தலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். 

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, நாகோன் நகருக்கு அருகிலுள்ள போர்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்றை வழிமறித்து விசாரித்த நிலையில், லாரியின் பின்பக்கத்தில் 24 மாட்டின் தலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சர்கார் அலி மற்றும் ஹசன் அலி என அடையாளம் காணப்பட்டது. இந்த லாரி போர்காட் பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்தது. 

மேலும், விசாரணையின் போது, அவர்கள் அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள ஜோராபத் பகுதிக்கு கால்நடைகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில், நாகோன் சதர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைத் தலைகள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →