இந்தியா

கர்நாடக தேர்தல் பிரசாரக் குழு தலைவராக முதல்வர் பொம்மை நியமனம்!

கர்நாடகத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை பாஜக தலைவர் ஜெபி நட்டா வெள்ளிக்கிழமை நியமித்தார். 

DIN

கர்நாடகத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை பாஜக தலைவர் ஜெபி நட்டா வெள்ளிக்கிழமை நியமித்தார். 

தேர்தல் நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு குழுவின் தலைவராக பொம்மையையும், மற்றொரு குழுடிவன் பொதுச் செயலாளராக கரந்த்லாஜேவையும் நியமித்து சமநிலையை ஏற்படுத்தக் கட்சி முயற்சித்துள்ளது. 

இவர்களைத் தவிர, கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு குழுக்களிலும் உறுப்பினர்களாக கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மாநில பிரிவு தலைவர்களைக் கட்சி நியமித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவர் ப்ரஜினுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து ஓடிய சான்ட்ரா!

ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

வணிகத் தலைநகர் மும்பையை உலுக்கும் சைபர் குற்றங்கள்! கார்டு குளோனிங், ஓடிபி மோசடி!

நாதன் லயனுக்கு எதிராக ஆஸி. கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறதா? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

சென்னை திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள 12 தமிழ்ப் படங்கள்!

SCROLL FOR NEXT