முகப்பு
இந்தியா

முன்னாள் அமைச்சா் கொலை வழக்கு: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில், மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. அவினாஷ் ரெட்டி சிபிஐ விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில், மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. அவினாஷ் ரெட்டி சிபிஐ விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

இந்த கொலை வழக்கு விசாரணைக்காக அவினாஷ் ரெட்டி சிபிஐ முன்பு ஆஜராவது இது மூன்றாவது முறையாகும்.

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவான விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ஆம் ஆண்டு தனது வீட்டில் தனியாக இருந்தபோது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் அப்போது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் ஆந்திர மாநில சிறப்பு விசாரணைக்குழு இந்த கொலை வழக்கை விசாரித்தது. அதன்பிறகு கடந்த 2020-ஆம் ஆண்டு சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கு நடுவே இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவும், சாட்சியாக கருதப்பட்டவரும் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தனா்.

குடும்ப அரசியல் பிரச்னை காரணமாக விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், இப்போது விசாரணைக்கு ஆஜராகியுள்ள எம்.பி அவினாஷ் ரெட்டியும் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு உறவினா்தான். அவினாஷ் ரெட்டியின் தந்தையும் மாா்ச் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →