கோப்புப்படம் 
இந்தியா

சிசோடியாவின் மனு இன்று விசாரணை: ஜாமீன் கிடைத்தாலும் பயனில்லை!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் வழக்கில் சிபிஐ காவல்துறையால் பிப்.26-ஆம் தேதி மனீஷ் சிசோடியோவை கைது செய்யப்பட்டார். மார்ச் 20 வரை திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக சிசோடியாவிடம் மாா்ச் 7-ஆம் தேதி அமலாக்கத் துறையின் மூவா் குழு விசாரணை மேற்கொண்டது. வியாழக்கிழமை இரண்டாவது முறையாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினா் இறுதியில் அவரை கைது செய்தனா்.

சிசோடியாவை இன்று பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.

இந்நிலையில், சிபிஐ வழக்கில் சிசோடியா ஜாமீன் கோரிய மனு தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் அவர் சிறையிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

இதனிடையே, பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்பதால்தான் அமலாக்கத் துறை அவரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

SCROLL FOR NEXT