இந்தியா

கடனை அடைக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகளை விற்கும் அதானி?

ENS

பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி, பங்குச் சந்தைகளில் கடும் சரிவைக் கண்டுவரும் அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்வழங்குபவர்களிடம் அதானி முறையான கோரிக்கையை வைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேற்கோள்காட்டுகின்றன.

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், கடன் வழங்கியிருப்பவர்கள், திரும்ப கடன் கிடைக்குமா என்ற கவலையைப் போக்கவும், முதிர்வு காலத்துக்கு முன்னதாகவே, கடன்களை அதானி குழுமம் அடைத்து வருகிறது. அதற்கான நிதியை திரட்டவே அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் முதிர்வு காலம் இருக்கும் ரூ.7,374 கோடி மதிப்பிலான கடன் நிலுவைகளை அதானி நிறுவனம் முன்கூட்டியே திரும்ப செலுத்தியிருந்தது. 

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குவோரின் நம்பிக்கையை பெறும் வகையில், கடன் நிலுவைகளை முன்கூட்டியே செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அதானி குழுமம் எடுத்து வரும் நிலையில், அதற்காகவே, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

85 விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT