இந்தியா

'என்னை தொந்தரவு செய்யலாம்.. ஆனால்'.. திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா

என்னை சிறையில் அடைந்து நீங்கள் தொந்தரவு செய்யலாம். ஆனால், எனது ஊக்கத்தை உடைக்க முடியாது என்று திகார் சிறையிலிருந்து முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

PTI


புது தில்லி: என்னை சிறையில் அடைந்து நீங்கள் தொந்தரவு செய்யலாம். ஆனால், எனது ஊக்கத்தை உடைக்க முடியாது என்று திகார் சிறையிலிருந்து முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை தொடா்புடைய ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ விசாரணை காவல் முடிந்த நிலையில், மாா்ச் 20-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மாா்ச் 20-ஆம் தேதி சிசோடியாவை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜா்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலால் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவிடம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத் துறை இந்த வாரம் சிசோடியாவை கைது செய்தது.

இந்த நிலையில், மணீஷ் சிசோடியா, திகார் சிறையிலிருந்து வெளியிட்டிருக்கும் தகவலில், என்னை கைது செய்து சிறையில் அடைத்து நீங்கள் தொந்தரவு செய்யலாம். ஆனால், எனது ஊக்கத்தை ஒருபோதும் உடைகக் முடியாது.

சுதந்திரப்போராட்டத்தின் போதும், சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைந்து துன்புறுத்தினர். ஆனால் ஒருபோதும் அவர்களது ஊக்கம் குறையவில்லை என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சிபிஐ கைது செய்யப்பட்ட நிலையில், தில்லி அமைச்சரவையிலிருந்து சிசோடியா பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT