இந்தியா

கர்நாடகம் சென்ற மோடிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு

DIN


கர்நாடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாண்டியா மாவட்டத்துக்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு சாலையில் இருபுறத்திலும் காத்திருந்த தொண்டர்கள் பூங்களைத் தூவி வரவேற்றனர். 

கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ள ஹுப்பாளி-தார்வாத் விரைவுச்சாலையினை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கவுள்ளார். 

பெங்களூரு-மைசூரு இடையேயான 10 வழிச் சாலையினை தொடக்கி வைத்து, பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். 

பின்னர், பிரதமர் நரேந்திர ஐஐடி தார்வாத்தினை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ஐஐடிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.850 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐஐடி தற்போது பி.டெக், எம்.டெக், பிஎஸ்-எம்எஸ், பிஹெச்டி போன்ற படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

இந்நிலையில், நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க கர்நாடகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சாலையில் இரு புறங்களிலும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்து சென்ற பிரதமரின் காருக்கு பூக்களைத் தூவி வரவேற்றனர். காரின் கதவருகே நின்றவாரு தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமாவுக்கு பறந்த சிறகடிக்க ஆசை தொடர் நடிகை!

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

SCROLL FOR NEXT