முகப்பு
இந்தியா

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்குகிறது!

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை திங்கள்கிழமை(மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:


புதுதில்லி: 2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. 

2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வின் போது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. 

இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்த ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நாளை திங்கள்கிழமை (மார்ச்.13) தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் மற்றும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விற்கு முன்னதாக, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சபையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments