ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2000 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 12 லட்சம் விவசாயிகள் மாநிலம் முழுவதும் பயனடைகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.