ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம் 
இந்தியா

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ், அடுத்த கௌரவத்துக்குத் தயாராகிவிட்டார். அதுதான், வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் என்ற அங்கீகாரம்.

DIN


மும்பை: ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ், அடுத்த கௌரவத்துக்குத் தயாராகிவிட்டார். அதுதான், வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் என்ற அங்கீகாரம்.

மும்பை - புனே - சோலாபூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை தனது மகுடத்தில் சூட்டிக்கொண்டுள்ளார் சுரேகா யாதவ்.

34 ஆண்டுகள் ரயில் ஓட்டுநர் பணியில் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கும் சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த பணிக்காக அவர் மிகக் கடினமான பயிற்சிகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மிக வேகத்தில் வரும் ரயிலில் இருந்து கொண்டு ரயில் சமிக்ஞைகளை கவனித்தல், புதிய அதி நவீன கருவிகளை இயக்குவது, சக ஓட்டுநருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், ரயிலின் வேகம் என அனைத்துக்குமான பயிற்சிகள் முடித்து, அவர் பணியிலும் இணைந்துவிட்டார்.

1989ஆம் ஆண்டு, உதவி ரயில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்த சுரேகா, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில் ஓட்டுநராக பணி உயர்வு பெற்றார். படிப்படியாக அவரது பணியில் உயர்ந்து தற்போது வந்தே பாரத் ரயில் ஓட்டுநராகியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 1,500 பெண் ரயில் ஓட்டுநர்கள் இருப்பதாக இந்திய ரயில்வேயின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 21 பேர் கொலை!

"ராணுவத்தைக் கைவிட்ட மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 04.02.26

குகி சமூக முதல் பெண் துணை முதல்வர், நெம்சா கிப்கென் யார்?

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ருத்ர தாண்டவம்! தெ.ஆ.வுக்கு 241 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT