தில்லி திரும்பிய ராகுல் காந்தி: நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை?
பிரிட்டனிலிருந்து திரும்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இன்று பிற்பகல் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனிலிருந்து திரும்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இன்று பிற்பகல் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் சொற்பொழிவாற்றிய ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், அவா் உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளதாக குற்றம்சாட்டிய பாஜகவினர் கடந்த மூன்று நாள்களாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி நாடாளுமன்ற அவைகளில் முழக்கமிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | 3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!
இந்நிலையில், பிரிட்டன் பயணத்தை முடித்துவிட்டு தில்லி திரும்பியுள்ள ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தரும் பட்சத்தில், அவரை மன்னிப்பு கேட்கக் கோரி ஆளும் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிடவும் வாய்ப்புள்ளது.