'நான் போக வேண்டும்'.. பிரதமர் மோடி குறித்து பாஜக வெளியிட்ட விடியோ
நான் போக வேண்டும் என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் அனிமேஷன் விடியோ ஒன்றை பாஜக வெளியிட்டிருக்கிறது.
நான் போக வேண்டும் என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் அனிமேஷன் விடியோ ஒன்றை பாஜக வெளியிட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியது முதல், பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து இன்று பல திட்டங்களை மக்களுக்கு அளித்திருப்பதாக, பாஜக வெளியிட்டிருக்கும் விடியோ தெரிவிக்கிறது.
இதையும் படிக்க.. காய்ச்சல் நல்லதாகவும் இருக்கலாம்: புதிய ஆராய்ச்சியில் தகவல்
ஒரு உயரமான படிகட்டுகளை பல தடைகளைத் தாண்டி ஏறிச் சென்று கொண்டே இருப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அனிமேஷன் விடியோவுக்கு நான் போக வேண்டும் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தேசிய அரசியலுக்குள் நுழைந்தபோது, அவர் ரயிலில் தேநீர் விற்றவர் என்றும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர் என்றும், 100 தலை ராவணன் என்றும் பல விமரிசனங்களை எதிர்க்கட்சியினர் முன் வைத்தனர். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி, 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றுக் கொண்டதாக அனிமேஷனில் விளக்கப்பட்டுள்ளது.
பிறகு, அமெரிக்க அதிபரே, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா, எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோரின் அனிமேஷன் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.
பிறகு, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல அஸ்திரங்களை எய்தாலும், அதையெல்லாம் தாண்டி, நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பல நல திட்டங்களை அதாவது, தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், இலவச சிலிண்டர், ஏழைகளுக்கு மானியத்தில் கோதுமை மற்றும் பருப்பு, ஜன்தன் கணக்கு, பிரதமரின் வீட்டு வசதி திட்டம், குடிநீர் திட்டம், விவசாயிகளுக்கு மானியம் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதை அனிமேஷன் விடியோ சொல்கிறது.
ரஃபேல் ஊழல், பிபிசி ஆவணப்படம் போன்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் தாண்டி, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி பயணிப்பதாக அந்த விடியோ நிறைவு பெறுகிறது.
இந்த அனிமேஷன் விடியோவை ஆயிரக்கணக்கானோர் ரீடிவீட் செய்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் விரும்பியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.