இந்தியா

தேஜஸ்வி யாதவுக்கு 4வது முறையாக சம்மன் அனுப்பியது சிபிஐ!

பிகார் நில மோசடி தொடர்பான வழக்கில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

பிகார் நில மோசடி தொடர்பான வழக்கில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா். அதற்குக் கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை, லாலு குடும்பத்தினா் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனா். அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ தொடர்ந்து நான்காவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 24ஆம், மார்ச் 4, 11 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி மூன்று சம்மன்களைத் தவிர்த்த நிலையில், தற்போது 4வது முறையாக மார்ச் 25ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த வெள்ளியன்று தில்லி, பிகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT