ராகுல் காந்தி முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: பாஜக
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்காக முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்
புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்காக முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள் இருவரும் பேசுகையில், ராகுல் காந்தி, மக்களவையில் பேச அவைத்த லைவர் ஓம் பிர்லாவிடம் அனுமதிக் கோரியிருக்கிறார். ஆனால், அவர் பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
இதையும் படிக்க.. காய்ச்சல் நல்லதாகவும் இருக்கலாம்: புதிய ஆராய்ச்சியில் தகவல்
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில், மற்றொரு நாளும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடங்கியிருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் ராகுல் காந்தி மீது கோபத்தில் உள்ளது என்றார்கள்.
எந்த உண்மையும் இல்லாத அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறியிருப்பதாகவும் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜகவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருக்கும் காங்கிரஸ், கட்சியின் முன்னாள் தலைவர் மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் பாஜக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.