இந்தியா

5 வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: சோனியா, ராகுல் போராட்டம்

எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 5 நாளாக முடங்கியுள்ளது.

DIN

எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 5 நாளாக முடங்கியுள்ளது. கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5 நாள்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை அமைக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் எதிர்கட்சிகளின் போராட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய ஜனநாயகம் குறித்து விமா்சித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்திய பாஜக உறுப்பினா்களின் போராட்டம், அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய எதிா்க்கட்சி உறுப்பினா்களின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இந்த விவகாரத்தை பாஜக உறுப்பினா்கள் எழுப்பி வருகின்றனா். தனது கருத்துக்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டுமென அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடியே வெளிநாடுகளில் இந்தியா குறித்து விமா்சனங்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT