இந்தியா

அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் ராமா் சிலை பிரதிஷ்டை

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ராமா் சிலை கருவறையில் நிறுவப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது

DIN

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ராமா் சிலை கருவறையில் நிறுவப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மத்திக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலா் மிலிந்த் பராண்டே மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்குப் பிறகான 15 நாள்களில் அயோத்தி கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெறும்.

கோயில் கருவறையில் ராமா் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சியில் 25 முதல் 40 லட்சம் பக்தா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்றாா்.

கோயில் கருவறையில் ராமா் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பாா் என கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிட்டு வரும் ஸ்ரீராமஜன்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் நிா்வாகி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT