கோப்புப் படம் 
இந்தியா

ஏப்ரலில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் கிடைத்த ஜிஎஸ்டி வசூல் இதுவாகும்.

DIN

கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் கிடைத்த ஜிஎஸ்டி வசூல் இதுவாகும்.

ஏப்ரல் 20-ஆம் தேதி ஒரே நாளில் ரூ.68.228 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தத் தொகையானது, கடந்த ஆண்டு ஏப்ரலில் வசூலானதை விட ரூ.19,495 கோடி அதிகம் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

2023 மார்ச் மாதம் மொத்தம் 9 கோடி மின்னணு ரசீதுகள் உருவாக்கப்பட்டதாகவும், இது அதற்கு முந்தைய மாதத்தை விட 11% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,559 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவிகிதம் அதிகமாகும்.

புதுச்சேரியில், ரூ.218 கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவிகிதம் அதிக வசூலாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT