இந்தியா

கலால் முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகையில் சய்சஞ் சிங், ராகவ் சதா பெயர்கள் இணைப்பு!

தில்லி கலால் கொள்ளை முறைகேடு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தனது மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில் ஆத் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சதா ஆகியோரின் பெயர்களை இணைத்துள்ளது. 

DIN

தில்லி கலால் கொள்ளை முறைகேடு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தனது மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில் ஆத் ஆத்மி தலைவர்கள் சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சதா ஆகியோரின் பெயர்களை இணைத்துள்ளது. 

இரு தலைவர்களும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார். குற்றப்பத்திரிகையில் அவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, வழக்கில் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. 

முன்னதாக, முன்னாள் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் முன்னாள் செயலாளர் சி.அரவிந்த் விசாரணை அமைப்பிடம் கூறுகையில், சிசோடியாவின் இல்லத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதில் ராகவ் சத்தாவும் கலந்துகொண்டதாக விசாரணையின்போது தெரிவித்தார். 

மேலும், அந்த கூட்டத்தில் பஞ்சாப் காலல் துறை ஆணையர் வருண் ரூஜம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் நாயர் மற்றும் பஞ்சாப் கலால் இயக்குநரகத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகளும் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கின்றது. 

தில்லி புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்.26-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணை காவல் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8-ம் தேதி வரை நீடித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் தீ விபத்து

11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

காவல் துறை கழிவு வாகனங்கள் ஏலம்: ஜன.24-இல் முன்பதிவு

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

திருவாடானையில் மாட்டுப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT