முகப்பு
இந்தியா

மே 3, 4-ல்  கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் செயல்படாது!

மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 2 மே, 2023 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:24 AM

மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

வாடியா குழமத்தைச் சேர்ந்த கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் திவால் நோட்டீஸை அளித்துள்ளது. தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நோட்டீஸை தாக்கல் செய்துள்ளது.

பிராட் மற்றும் விட்னி நிறுவனத்திலிருந்து தங்கள் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் வரவில்லை என்று கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது. மேலும், விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காததால் 28 கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில்  கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என்று கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.