இந்தியா

தி கேரளா ஸ்டோரி: வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

DIN

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதிக்கும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த படம் மாநிலத்தில் மதத்தினரிடையே மோதல்களை ஏற்படுத்தி சமத்துவத்தை சீர்குலைக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ஆதா ஷா்மா, புா்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சியில், ‘ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன்; தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளன். இது கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்களின் கதை’ எனக் கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT