முகப்பு
இந்தியா

தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
சரத் பவார்
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகியதையடுத்து அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் நேற்று திடீரென அறிவித்தார். மேலும் 15 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து அடுத்த தலைவரை தேர்வு செய்யவும் வலியுறுத்தியிருந்தார்.

இது அவரது கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என்று கட்சியினர் பலரும் வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களும் அவ்வாறே வலியுறுத்துகின்றனர். 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அதில், 'சரத் பவார் பதவி விலகல் முடிவை ஏற்க முடியாது, கட்சியின் தலைவராக அவரே தொடர வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →