முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 மே, 2023 at 12:16 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் சனிக்கிழமையன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

பயங்கரவாதியிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், 
கைத்துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு வெடிமருந்து பை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது.

Advertisement

இன்று அதிகாலை பாரமுல்லாவில் உள்ள கர்ஹாமா குன்சர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட நபர், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் குல்காம் பகுதியைச் சேர்ந்த அபித் வானி என அடையாளம் காணப்பட்டார். பயங்கரவாதியிடம் இருந்து ஏகே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.