முகப்பு
இந்தியா

பெங்களூருவில் பேரணியைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூருவில் மாபெரும் பேரணியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கினார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
பகிர்:

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூருவில் மாபெரும் பேரணியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கினார். 

பெங்களூருவில் இன்று நடைபெறும் பேரணியில் சுமார் 26.5 கி.மீ தூரத்தையும், இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஐடி நகரில் 8 கி.மீ தூரமும் மக்களைச் சந்திக்க உள்ளார். 

நகரின் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மோடியின் வாகனத்தின் மீது மலர் தூவி வரவேற்றனர். அவருடன் பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா, மத்திய எம்பி, பி.சி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

பெங்களூருவின் தெற்கு தொகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி மைதானம் அருகே உள்ள சோமேஸ்வர பவனில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி, மல்லேஸ்வரத்தில் உள்ள சாங்கி டேங்கில் மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. 

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல காவல்துறை உதவி செய்து வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பாஜக தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →