இந்தியா

பிரதமருக்காக மக்கள் பெயரில் போலி ஏற்பாடு: நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் ஊர்வலத்தில் மக்கள் தூவியதாக கூறப்படும் மலர்கள், பாஜகவினர் ஏற்பாடு செய்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் ஊர்வலத்தில் மக்கள் தூவியதாக கூறப்படும் மலர்கள், பாஜகவினர் ஏற்பாடு செய்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கடந்த 7 நாள்களாக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து 31 மாவட்டங்களில் 18 பொதுக் கூட்டங்களில் பேசினார். 5 திறந்தவேன் பிரசார ஊர்வலங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

பெங்களூரில் மட்டும் கடந்த 2 நாள்களில் 36 கி.மீ. ஊர்வலமாகச் சென்ற மோடிக்கு, வழிநெடுங்க மக்கள் மலர்தூவி வரவேற்றதாக புகைப்படங்களும், விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், பிரதமரின் வரவேற்புக்காக பாஜகவினரே கிலோ கணக்கில் மலரை வாங்கி மக்களுக்கு வழங்கும் காணொளியை  இணையதள செய்தியாளர் முகமது ஜுபைர் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விடை பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “வெட்கம். எப்போதும் பொய்களுக்கான மேடை அமைக்கப்படுகிறது.” என்று தாக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT