பெங்களூருவில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பு!
கர்நாடகத் தேர்தலையொட்டி பெங்களூரு விஜயநகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடகத் தேர்தலையொட்டி பெங்களூரு விஜயநகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடகப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இதற்கான தேர்தல் பிரசாரம் மே 8 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெங்களூரு விஜயநகர் தொகுதியில் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
மாபெரும் இந்த பேரணியில் காங்கிரஸ் ஆதரவாளர்கள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். வழிநெடுக பிரியங்கா காந்திக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரு தினங்களாக பெங்களுருவில் 36 கிமீ தூரம் மாபெரும் சாலைப் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.