ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் எனப்படும் எண்ம உலகில் நாள்தோறும் புதுபுதுவகையில் மோசடிகள் நடந்தேறுகின்றன.
பொதுவாக ஸ்கேம் என்ற அடையாளத்துடன் நமக்கு வரும் அழைப்புகளை நாம் நிராகரிப்போம். அல்லது அழைப்பை துண்டித்துவிடுவோம். பிறகு பிளாக் செய்துவிடுவோம்.
ஆனால், மோசடியாளர்களை புதுவிதமாக் கையாள முடிவெடுத்த உதிதா பால், தனது அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரான உதிதா பால், பலருக்கும் முன்மாதிரியாகியிருக்கிறார். அவர் மோசடியாளர்களுடன் நடந்த வாட்ஸ்ஆப் உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், மோசடியாளர்கள் உதிதாவுக்கு வேலை தருவதாக ஆசை காட்டும் மோசடி கும்பல், ஒரு விடியோவைப் பார்த்து லைக் செய்தால் பணம் தருவதாகக் கூறுகிறார்கள். அந்த லிங்க்கை உதிதா கிளிக் செய்ததும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடியாளர்கள் திருடியிருப்பார்கள்.
ஆனால், அதற்கு உதிதா ஒரு யோசனை செய்து ஒரு சிலர் உங்களை மோசடி செய்ய முயல்கிறார்கள் என்ற விடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து மோசடியாளர்களுக்கு அனுப்பி, நீங்கள் என்ன ஏமாற்றப் பார்க்கிறீர்களா என்று கேட்கிறார்.
தொடர்ந்து, உதிதா, நீங்கள் ஏமாற்றுப் பேர்வழி என்பது தெரியும், நீங்கள் ஏன் என் கம்பெனியில் சேரக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கும்போதே, மோசடியாளர்கள் உதித்தாவை பிளாக் செய்துவிடுகிறார்கள்.
இதுவரை மோசடியாளர்களைத்தான் நாம் பிளாக் செய்துகொண்டிருந்தோம். அவர்களே ஒருவரது எண்ணை பிளாக் செய்யவைத்துவிட்டார் உதிதா என்று டிவிட்டரில் பாராட்டுகள் குவிகின்றன.
இதுபோல பலரும் தங்களது அனுபவங்களையும் இந்த டிவிட்டர் பதவில் பதிவிட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.