முகப்பு
இந்தியா

ம.பி. பேருந்து விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம்

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

மத்திய பிரதேச பேருந்து விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தசங்கா பகுதி அருகே உள்ள பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் 15 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000 நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →