இந்தியா

உ.பி.யில் தி கேரளா ஸ்டோரிக்கு வரிவிலக்கு: சிறப்புக் காட்சிக்கு செல்லும் யோகி!

உத்தரப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

DIN


உத்தரப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தில் இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்தரித்து வெளியிடப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து அமைச்சர்களுடன் இணைந்து இந்த படத்தை யோகி பார்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT