கோப்புப்படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் கார்-லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் லாரியும் காரும் மோதிய விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் லாரியும் காரும் மோதிய விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். 

மோர்கா காவல் நிலையத்திற்குள்பட்ட மதன்பூர் வனத்தடுப்புக்கு அருகே லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அம்பிகாபூரிலிருந்து ஜக்தல்பூருக்கு தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தார் மனோஜ் குமார். 

அப்போது எதிர்த்திசையில் வேகமாக வந்த லாரி - காருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த மனோஜ் குமார், மனைவி, இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டுத் தப்பியோடினார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களை காரில் இருந்து வெளியே எடுத்தனர். இரண்டு வாகனங்களும் அதிவேகமாகச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT