இந்தியா

ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ராஜஸ்தானின் ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். 

DIN

ராஜஸ்தானின் ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார். 

ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் வழிபாடு செய்த மோடி சிறிது நேரம் கோயிலில் தங்கிப் பார்வையிட்டார். 

கோயிலுக்குச் செல்லும் வழியில் மக்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்று மலர்களைத் தூவி பிரதமரை வரவேற்றனர். 

ராஜஸ்தானில் ரூ.5,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

ராஜ்சமந்த் மற்றும் உதய்பூரில் இருவழிப்பாதையாக மேம்படுத்துதல் மற்றும் உதய்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான சாலை கட்டுமான திட்டங்களுக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

பிரம்மா குமாரிகளின் மத அமைப்பான சாந்திவன் வளாகத்திற்கும் பிரதமர் வருகை தருகிறார். மேலும், உலகளாவிய தொண்டு மருத்துவமனை, சிவமணி முதியோர் இல்லம் மற்றும் செவிலியர் கல்லூரி விரிவாக்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT