முகப்பு
இந்தியா

உ.பி.யில் பணியிலிருந்த காவலர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் கோட்வாலி நெடுஞ்சாலை புறக்காவல் நிலையத்திற்கு அருகே பணியிலிருந்த காவலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கோட்வாலி நெடுஞ்சாலை புறக்காவல் நிலையத்திற்கு அருகே பணியிலிருந்த காவலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

உயிரிழந்த காவலர் பெத்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரவு பணியிலிருந்த காவலரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலர் மீது தீப்பந்தத்தை வீசி, பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் தப்பியோடியதாகவும், அவர்களைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் உள்ளூர் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸார் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்று பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.