இந்தியா

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியானார் டி.எஸ்.சிவஞானம்!

DIN

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் வியாழக்கிழமை பதவியேற்றார். 

தற்காலிக நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானத்துக்கு ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

நாட்டின் பழமையான உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறை எண் ஒன்றில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். 

எதிர்க்கட்சித் தலைவர்கள் சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பிமன் பானர்ஜி, மூத்த மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதியின் குடும்பத்தினர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் பிறகு கூட்டத்தில் உரையாற்றிய தலைமை நீதிபதி, மேற்கு வங்க மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் எந்தக் களங்கமும் ஏற்பட விடமாட்டேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT