eicher070843 
இந்தியா

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 49 சதவீதம் உயர்வு

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 49 சதவீதம் அதிகரித்து ரூ.906 கோடி உயர்ந்துள்ளது.

DIN

புதுடில்லி: ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 49 சதவீதம் அதிகரித்து ரூ.906 கோடி உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் ரூ.610 கோடி நிகர லாபம் ஈட்டியது. அதே வேளையில் நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.3,193 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,804 கோடியாக உள்ளது.

மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.2,914 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 2022 நிதியாண்டில் ரூ.1,677 கோடியாக உள்ளது.

2021-22ம் நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.10,298 கோடியிலிருந்து ரூ.14,442 கோடியாக அதிகரித்துள்ளது. 2023-24ம் ஆண்டில் ரூ.1,000 கோடி ரொக்க ஒதுக்கீட்டிற்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.25 சதவீதம் சரிந்து ரூ.3,407.05 ரூபாயாக முடிவடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT