இந்தியா

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

DIN

'தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த பொதுநல மனுவில், 'தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்க்க விரும்பும் மக்களுக்கும், படத்தைத் திரையிட விரும்பும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு உடனடியாகத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சில மாநிலங்களில் திரைப்பத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். ஏனெனில் தடை விதிப்பது அந்த மாநிலத்தில் வன்முறை மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளது. 

ஏற்கெனவே  'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மே 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி பல கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்திரித்துள்ளதாக இப்படத்தின் மீது  கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT